தேசியக்கொடி ஏற்றி வைத்த முன்னாள் அமைச்சர்

குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
இந்தியாவின் 77வது குடியரசு தினவிழா குமாரபாளையத்தில் பல்வேறு இடங்களில் நடந்தது. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பிரகாஷ், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தவமணி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலவர் (பொ) சரவணாதேவி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஆடலரசு, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை காந்தரூபி, அரசு நூலகத்தில் மற்றும் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேல், அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சுகந்தி, வசுகிநகர் தர்ம தோப்பு அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியை நாகரத்தினம் , புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமையசிரியை கிருஷ்ணவேணி, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நகர தலைவர் ஜானகிராமன் ஆகியோர் தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.
Next Story