நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் குடியரசு தின விழா! இராஜேஸ்குமார் எம்பி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை !

X
Namakkal King 24x7 |26 Jan 2026 8:58 PM ISTஇந்த நிகழ்வில் கூட்டுறவு வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மூவர்ண தேசிய கொடியினை மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். நாட்டின் 77 வது குடியரசு தின விழா மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி மூவர்ண தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியத் தலைவர் கனிமொழி, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, துணை மேயர் செ.பூபதி, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் /இணை பதிவாளர் சந்தானம், வங்கியின் இயக்குனர்கள் எருமப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் பி.பாலு (எ) பாலசுப்ரமணியன், மோகனூர் ஒன்றிய கழக செயலாளர் பெ.நவலடி, பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர்.மாயவன், மாவட்ட துணை செயலாளர் ராணி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஜோதிலட்சுமி, கௌரி, கவுன்சிலர் குட்டி (எ) செல்வகுமார் மற்றும் கூட்டுறவு வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
