ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்

ஓய்வூதியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து, விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்
ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர்களின் நலன்களை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 நிர்ணயிக்க வேண்டும், ஓய்வூதியப் பிடித்தம் (Commutation) காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நிலவும் குளறுபடிகளை நீக்கி, தடையற்ற மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வட்டக்கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் உரையாற்றினர். அவர்கள் பேசுகையில், அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையில் அடிப்படை தேவைகளுக்காக போராட வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்றும், ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் சிகிச்சை ஆகியவை உரிமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், ஓய்வூதியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து, விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story