நாமக்கல் கிழக்கு மாவட்ட‌ காங்கிரஸ் தலைவராக டாக்டர் செந்தில் பதவி ஏற்பு விழா! காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு!

நாமக்கல் கிழக்கு மாவட்ட‌ காங்கிரஸ் தலைவராக டாக்டர் செந்தில் பதவி ஏற்பு விழா! காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு!
X
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட‌ தலைவர் பதவி ஏற்பு விழா 28.01.2026 புதன்கிழமை காலை நடைபெறுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட‌த் தலைவராக டாக்டர் பி.வி. செந்தில் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 28.01.2026-புதன்கிழமை 11.30 மணியளவில் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைவராக பதவி ஏற்க உள்ளார்.இதுகுறித்து முன்னாள் மாவட்ட தலைவர் பி.ஏ., சித்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. கிழக்கு மாவட்ட‌ தலைவராக பதவி ஏற்க உள்ள டாக்டர் செந்தில் அவர்களுக்கு, நாமக்கல் நகர எல்லையான முதலைப்பட்டி பைபாஸ் பகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிறகு டாக்டர் செந்தில் பூங்கா சாலை பகுதியில் உள்ள உள்ள நேரு, காமராஜர் மற்றும் காந்தியடிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்த பின்னர், அங்கிருந்து விழா நடைபெறும் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்திற்கு வர உள்ளனர்.இந்நிகழ்வில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்கள் பல்வேறு வட்டாரங்களில் இருந்தும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story