பிள்ளாநல்லூர் ஏரியில்,அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிராவல் மண் அள்ளிச் சென்ற ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி வலியுறுத்தல்

பிள்ளாநல்லூர் ஏரியில்,அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிராவல் மண் அள்ளிச் சென்ற ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி வலியுறுத்தல்
X
உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளின் அடிப்படையிலேயே ஏரியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் ஏரியில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிராவல் மண் அள்ளிச் சென்ற ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் நீராதாரத்தை பாதுகாக்க மேலும் கிராவல் மண் அள்ளக்கூடாது கூடாது என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நாமக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் குருசாமிபாளையம் அருகே பிள்ளநல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மனு அளித்தனர்.முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறுகையில்....பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட ஏரியில் கனிமவளத் துறையின் சார்பில் கிராவல் மண் அள்ளுவதற்கு நாமக்கல் கலெக்டர் இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். அந்த ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 20 அடி ஆழம் பள்ளம் தோண்டி கிராவல் மண் அள்ளிச் சென்று விலைக்கு விற்று விட்டார்கள் என தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாஜக மற்றும் விவசாயிகள் அந்த ஏரியை நேரில் பார்வையிட்டோம். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூறி, 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி கிராவல் மண் எடுத்ததால் நீர் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்ட, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளோம்.மேலும் அந்த ஏரியில் கிராவல் மண் அள்ளக் கூடாது என்றும், இலாப நோக்கத்தோடு விற்பனை செய்யக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளின் அடிப்படையிலேயே ஏரியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். கனிமவளத் துறை, 5 ஆயிரம் கன மீட்டருக்கு மட்டுமே கிராவல் மண் அள்ளுவதற்கு அளித்த அனுமதியை மீறி, மண் அள்ளிவிட்டு தற்போது ஏரியில் பிற பகுதியில் உள்ள மண்ணைக் கொண்டு வந்து, அளவுக்கு அதிகமாக மண் தோண்டப்பட்ட இடத்தில் கொட்டி, ஒப்பந்ததாரர்கள் மறைத்துள்ளனர். எனவே, விதிமுறைகளை மீறி மண் அள்ளிய ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து, நீர் ஆதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு அதிலிருந்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை ஆகும்.இந்த விவகாரத்தில், ஆளுங்கட்சியின் பின்புலத்தோடு அரசு துறை அலுவலர்கள் துணையுடன், விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர்கள் செயல்பட்டுள்ளனர்.இந்த விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. பிள்ளாநல்லூர் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று கனிம வளம் கொள்ளையடிக்கப்படுகிறது.இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story