சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
Komarapalayam King 24x7 |27 Jan 2026 9:37 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் சரவணாதேவி (பொ) தலைமையில் நடந்தது. கல்லூரி சாலை பாதுகாப்பு குழுவின் தலைவர் ஞானதீபன் வரவேற்றார். வேதியியல் துறைத்தலைவர் மகாலிங்கம் வாழ்த்தி பேசினார். குமாரபாளையம் குமாரபாளையம் எஸ்.ஐ. நடராஜன் பங்கேற்று, சாலைப்பாதுகாப்பு குறித்து பேசினார். இவர் பேசியதாவது: இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கைபேசியை பயன்படுத்தக் கூடாது, ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும், வாகனங்களில் திரும்பும் போது கைகாட்டி சிக்னல் போட்டு திரும்ப வேண்டும், முந்தும் போது வலப்புறமாக முந்த வேண்டும்,, இருளில் லைட் போட்டு ஓட்டும்போது கண் கூசினால் லைட்டை டிம் பண்ணி ஓட்ட வேண்டும், முன்னால் செல்லும் வாகனத்தை 10 அடியாவது இடைவெளி விட்டு தொடர வேண்டும், சிக்னல்களை மதிக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் வாங்கிய பிறகுதன் வண்டி ஓட்ட வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். குமாரபாளையம் தலைமைக் காவலர் கௌரிசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்
Next Story
