ராசிபுரத்தில் தவெக விசில் சின்னம் பொதுமக்களுக்கு கொடுத்து கொண்டாட்டம்..

ராசிபுரத்தில் தவெக விசில் சின்னம் பொதுமக்களுக்கு கொடுத்து கொண்டாட்டம்..
X
ராசிபுரத்தில் தவெக விசில் சின்னம் பொதுமக்களுக்கு கொடுத்து கொண்டாட்டம்..
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக ராசிபுரத்தில் தவெக விசில் சின்னம் வெளிப்படுத்தும் விதமாக துண்டு பிரசுரம் மற்றும் விசில் பொதுமக்களுக்கு கொடுத்து சிறப்பாக கொண்டாடினர்.. இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை அறிவித்ததை முன்னிட்டு மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் படி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இராசை ஜெ.ஜெ.விஜய் செந்தில்நாதன், அவர்களின் முன்னிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தொடர்ந்து விசில் அனைவருக்கும் கொடுத்து சிறப்பாக கொண்டாடினர். இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்சியின் கொள்கை தலைவர்கள் புகைப்படம் மற்றும் துண்டு பிரசுரம்-விசில்- மற்றும் இனிப்புகள் பொதுமக்களுக்கும், வணிக கடைகளுக்கும், வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட,நகர,ஒன்றிய, பேரூர்,கிளை, இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, வர்த்தகஅணி மகளிர் அணி, மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து K.ஜீவா நாமக்கல் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் நன்றி கூறினார்..
Next Story