ராசிபுரத்தில் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலை பூஜையை தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின்...

ராசிபுரத்தில் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலை பூஜையை தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின்...
X
ராசிபுரத்தில் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலை பூஜையை தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிப்.1-ல் நடைபெறுதை யொட்டி புதன்கிழமை நடைபெற்ற இதற்கான முதல் கால யாகசாலை பூஜையில் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின். முன்னதாக கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினுக்கு யானைகளின் ஆசியுடன் கோவில் பட்டாச்சாரியார்களால் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டார். பின்னர் கோவில் வளாகத்தில் புதியதாக புனரமைக்கப்பட்ட அனைத்து சன்னதிகளின் கருவறையில் அமைந்துள்ள சுவாமி சிலைகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் கோவில் வளாக தூண்களின் சிற்ப வேலை பாடுகளை நேரில் பார்வையிட்டு, ஆண்டாள் சன்னதியில் கர்ப்ப கிரஹத்தில் உள்ளே சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் 145 யாக குண்டங்கள் அமைந்துள்ள யாகசாலையை பார்வையிட்டு, முதல்கால யாகசாலை பூஜைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த உற்சவ தங்க கவச ஸ்ரீபொன் வரதராஜ பெருமாளை வழிபட்டார். யாகசாலை வளாகத்தில் துர்கா ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீ. உ.வே.க.ஸ்ரீராமன் பட்டாச்சியார் தலைமையில் வேத மந்திரங்களுடன் மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார், ஸ்ரீமான் பிரபாகரன், சொர்ணம் குடும்பத்தினர், மற்றும் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், கோவில் நிர்வாக குழுவினர், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி விஜயகுமார், காவல் ஆய்வாளர் செல்வராஜ், காவல் உதவி ஆய்வாளர்கள் மனோகரன், கீதாலட்சுமி, ஈஸ்வரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் நடராஜன், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story