ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்...

ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்...
X
ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக சன்னதிகளை புனரமைக்கும் பணி நடைபெற்ற தோடு, புதிய ராஜகோபுரம் மற்றும் அலங்கார மண்டபங்கள் கட்டப்பட்டன. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு,இன்று புதன்கிழமை இரவு முதல் கால பூஜை தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 145 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் ஆகம விதிப்படி 4 கால பூஜைகளை நடத்த உள்ளனர். அந்த வகையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமானது செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம்,கடைவீதி, பெரியசாமி கடை, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம், சேலம் சாலை என சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை,குதிரை, காளைகள், வான வேடிக்கையுடன் ஊர்வலமாக சென்றனர்.. மேலும் குதிரை வாகனத்தில் தங்க கவச அலங்காரத்துடன் பெருமாள் திருவீதி உலாவும் 500. க்கும் மேற்பட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முக்கிய சாலைகளில் இந்த முளைப்பாரி சாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story