கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு...

X
Rishivandiyam King 24x7 |29 Jan 2026 9:52 AM ISTகனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில், பள்ளியில் பொருட் சேதப்படுத்திய வழக்கு விசாரணை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில், பள்ளியில் பொருட் சேதப்படுத்திய வழக்கு விசாரணை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட் டம், சின்னசேலம்அடுத்த கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி உயிரிழந்தார். மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு ஜூலை 17ல் நடந்த போராட்டம், கலவரமாக மாறியது. இவ்வழக்கை சிறப்பு புல னாய்வு குழு டி.எஸ்.பி., அம்மாதுரை மேற்பார் வையிலான போலீசார் விசாரித்தனர். பள்ளியில் நுழைந்து இதில் பள்ளி வளா கத்திற்குள் அத்துமீறி பொருட் களை சூறையாடியது, போலீஸ் வாகனங்க ளுக்கு தீ வைத்தது, பசுமாடுகளை துன்பு றுத்தியது, காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்கியது என 4 வழக்குகள் பதிவு செய்தனர். கலவரம் தொடர்பாக 916 பேர் மீது வழக்கு பதிந்து, அதில் 500க்கும் மேற் பட்டோரை கைது செய்தனர். இதில், பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய வழக் கில், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் 11 பெண்கள் உட்பட 615 பேர் மீது வழக்கு பதிந்தனர். இவ் வழக்கு விசாரணை சின்னசேலம் மாவட்ட உரி மையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில், 70 பேர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி காந்தி பிரியா, விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Next Story
