குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளரிடம் தேமுதிக நிர்வாகிகள் புகார் மனு
Kulithalai King 24x7 |29 Jan 2026 4:02 PM ISTஅவதூறு பரப்பி வரும் திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க புகார்
கரூர் மாவட்டம் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளரிடம் தேமுதிக கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமையில் புகார் மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் தேமுதிக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகர் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக திருச்சியை சேர்ந்த சூர்யா என்பவர் கடந்த 22 ஆம் தேதி சமூக வலைதளத்தில் தொடர்ந்து பல ஆதாரமற்ற செய்திகளையும் தகாத வார்த்தைகளையும் கூறி தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக பொய் செய்திகளை பரப்புவதால் தேமுதிகவிற்கும் தொண்டர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆகையால் திருச்சி சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிகழ்வில் குளித்தலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர், குளித்தலை ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் திராவிட மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story



