குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை
கரூர் மாவட்டம், குளித்தலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக வட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் 70 வயதான ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தணிக்கையாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். போராட்ட முடிவில் வட்ட செயலாளர் ரகு நன்றி கூறினார்.
Next Story