தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

6 தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு வட்டத் தலைவர் தீபக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த போராட்டத்தில் கிராம நிருவாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் கல்வி தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க கோருதல், கிராம நிருவாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீன மயமாக்கம் செய்ய கோருதல், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிருவாக அலுவலர், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிருவாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டியும் உள்ளிட்ட 6 தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் செய்தனர். போராட்ட முடிவில் வட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நன்றி தெரிவித்தார்.
Next Story