கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்
X
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி அடிக்கல் நாட்டினார்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2025-26ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மகாதானபுரம் ஊராட்சியில் ரூ.15 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் மகாதானபுரம்-தீர்த்தாம்பாளையம் இணைப்பு சாலையில், தேசிய நெடுஞ்சாலை முதல் தீர்த்தாம்பாளையம் வரை தார்சாலை மேம்படுத்துதல், திருக்காம்புலியூர் ஊராட்சியில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மேட்டுதிருக்காம்புலியூர் கடைவீதியில் உரக்கடை முதல் நாடக மேடை வரை தார்சாலை அமைத்தல், பாலராஜபுரம் ஊராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் சின்னமநாயக்கன்பட்டியில் புதிய சமுதாயக்கூடம் அமைத்தல் என மொத்தம் ரூ.52 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் திட்ட பணிகளுக்கு கிருஷ்ணராயபுரம் எம் எல்ஏ சிவகாமசுந்தரி, அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் பிடிஓதங்கராசு, முருகேசன்,மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவி ராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அம்பிகாபதி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கே.எஸ். பரமசிவம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சாக்ரடீஸ், துணை செயலாளர் இளவரசன், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், முன்னாள் மாவட்ட இளைஞர் துணை அணி அமைப்பாளர் அன்பழகன், கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story