அமைச்சர் வசம் கோரிக்கை மனு

X
Komarapalayam King 24x7 |29 Jan 2026 9:09 PM ISTநகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் நகர மன்ற தலைவர் கோரிக்கை மனு கொடுத்தார்.
குமாரபாளையம் நகராட்சியில் புதிதாக கட்டி வரும் புதிய பேருந்து நிலையம் மற்றும் வாரச்சந்தை ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது சம்பந்தமாகவும் குமாரபாளையம் நகராட்சியில் காலியாக உள்ள நகராட்சி பொறியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டியும் நகர மன்ற தலைவர், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய்கண்ணன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வசமும், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதனன் ரெட்டி வசமும் கோரிக்கை மனு கொடுத்தார்.
Next Story
