சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபி ஷேக விழா தீர்த்தகுடங்கள் ஊர்வலம்
Komarapalayam King 24x7 |29 Jan 2026 9:12 PM ISTகுமாரபாளையம் நடராஜா நகர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா தீர்த்தக்குடங்கள் ஊர்வலம் நடந்தது.
குமாரபாளையம் நடராஜா நகர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜன. 21ல் முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. நேற்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இன்றும், நாளையும் யாக சாலை பூஜைகள் நடக்கவுள்ளது. பிப். 1ல் காலை 09:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இளம்பிள்ளை சிவசக்தி ஷண்முக சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக பூஜைகள் நடத்தவுள்ளனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story


