ஆரணி எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா

X
Arani King 24x7 |30 Jan 2026 8:31 AM ISTஆரணி எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் முப்பெரும் விழா முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடதத்ப்பட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றதில் மாணவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டது.
ஆரணி எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் முதலாம் ஆண்டு விழாவும், ஏ.சி.எஸ் கல்விக்குழுமத்தின் 30ஆம் ஆண்டு விழா, நிர்வாக அறங்காவலர் லலிதாலட்சுமி பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடதத்ப்பட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆரணி எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆண்டு விழா மற்றும் ஏசிஎஸ் குழுமக் கல்லூரிகளின் 30ம் ஆண்டு விழாவும், கண்ணம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லலிதாலட்சுமிசண்முகம் பிறன்த நாள் விழா முன்னிட்டு கல்லூரிகளில் பணிபுரியும் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் கல்வி அல்லாத செயல்பாடுகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப்பொருட்கள், சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள் சுமார் 600 க்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பல்கலைகழகத்தின் பணி புரியும் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பரிசாக டி.வி, ஏர்கூலர், வெட் கிரைண்டர், மிக்ஸி, பிரஷர் குக்கர், டேபிள் ஃபேன், சாம்சங் டேப் போன்ற பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் முதலாம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி ஆய்வகத்தினை ஏ.சி.எஸ் கல்வி குழும நிறுவன தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்களின் சிறப்பு நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் கல்விக்குழும தலைவர் ஏ.சி.எஸ் அருண்குமார் தலைமை தாங்கினார். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் லலிதாலட்சுமி சண்முகம், பென்ஸ் கிட்ஸ் மற்றும் பென்ஸ் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் நிர்மலாஅருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு அனைவருக்கும் பரிசுகளை வழங்கினர். கல்லூரி செயலாளர் ஏ சி ரவி, பல்கலைக்கழக டீன் பி.ஸ்டாலின், இணை பதிவாளர்கள் பெருவழுதி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதன்மையர் புவனா, பிஸியோதெரபிதுறைத்தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
