ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

X
Arani King 24x7 |30 Jan 2026 8:32 AM ISTஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் வட்டத் தலைவர் ஆர்.கோபால் தலைமை தாங்கினார். மேலும் இதில் செயலாளர் எஸ்.இராமச்சந்திரன், பொருளாளர் கே.சிவக்குமார், மாவட்ட பொருளாளர் எஸ்.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 51 பேர் கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் நவீனமயமாக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் டிஎன்பிசி நேரடி நியமன முறையில் கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை விஏஓ எனவும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்புநிலை விஏஓ எனவும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சங்களை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
