குடியரசு தின விழாவில் இராசிபுரத்தை சேர்ந்த இருளர் சமூக பிரதிநிதிகள் பங்கேற்பு...

X
Rasipuram King 24x7 |30 Jan 2026 9:02 PM ISTகுடியரசு தின விழாவில் இராசிபுரத்தை சேர்ந்த இருளர் சமூக பிரதிநிதிகள் பங்கேற்பு...
இந்தியாவின் 77வது குடியரசு தின விழா டெல்லியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் பழங்குடியின சமூக உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது பெருமை சேர்த்த நிகழ்வாக அமைந்தது. இருளர் சமூகத்தைச் சேர்ந்த திரு. சின்னுசாமி மற்றும் திருமதி ரேவதி ஆகியோர், பழங்குடியினர் நலத்துறையின் வான் தன விகாஸ் கேந்திரா (VDVK) மற்றும் ஆதி கர்ம யோகி திட்டங்களின் பயனாளர்கள் ஆவர். இவர்களுடன், மேக்னம் தொண்டு நிறுவன ஒருங்கினைப்பாளர் திரு. வி. ஆனந்தராஜாவும் கலந்து கொண்டார். பழங்குடியினர் சமூகத்தின் வாழ்வாதாரம், திறன் மேம்பாடு மற்றும் தன்னிறைவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட அரசு திட்டங்களின் பயன் நேரடியாக சமூகத்துக்கு சென்றடைந்து வருவதை இந்த அழைப்பு வெளிப்படுத்துகிறது. தேசிய அளவிலான விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருப்பது, இருளர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. குடியரசு தின அணிவகுப்பை நேரில் கண்ட இவர்களுக்கு இது மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாக தெரிவித்துள்ளனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் பழங்குடியின சமூக உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது பெருமை சேர்த்த நிகழ்வாக அமைந்தது.
Next Story
