நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
X
மாநகராட்சி உறுப்பினர்கள் நகரின் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள மாநகராட்சி கூட்டரங்கில் மாதாந்திர மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் நகரின் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.அப்போது மாநகராட்சி உறுப்பினர் டி.டி. சரவணன் பேசுகையில்,
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.எனவே, தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்,
மாநகராட்சி உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில்
,தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மின் விளக்கு, குடிநீர் மற்றும் சாலை வசதிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்,அதேபோல், பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து வழங்க வேண்டும், பொதுமக்கள் அன்றாட போக்குவரத்தில் சிரமம் அடையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Next Story