நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

X
Namakkal King 24x7 |30 Jan 2026 9:25 PM ISTசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு மன்றம், யூத் ரெட் கிராஸ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாலை பாதுகாப்புப் பிரிவு (சேலம்) சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மு.ராஜேஸ்வரி (பொ) தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சேலம் சாலை பாதுகாப்புப் பிரிவு நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குமுதா, சாலை பாதுகாப்பின் அவசியம், மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகள் மற்றும் அவற்றைத் தவிர்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.உதவி கோட்டப் பொறியாளர் சுப்ரமணியம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள், செல்போன் பயன்பாடு மற்றும் போதைப் பொருள்களைத் தவிர்ப்பதன் மூலம் விபத்துகளை குறைக்க முடியும் என வலியுறுத்தினார். மேலும், ‘குட்டி காவலர் திட்டம்’, ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ ஆகிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் மற்றும் யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
