ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து.மத்திய அதிகாரி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்...

X
Rasipuram King 24x7 |30 Jan 2026 9:29 PM ISTராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து.மத்திய அதிகாரி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்...
திருச்சி மாநகர அன்பில் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (48). இவர் சேலத்தில் ஜிஎஸ்டி மற்றும் சுங்கவரி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இன்று பிற்பகலில் சேலத்தில் இருந்து திருச்சிக்கு காரில் புறப்பட்டு சென்றார். சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அடுத்த பாச்சல் அருகே சென்ற போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. அதில் கார் எதிர் திசை சாலைக்கு சென்று தலை குப்புற கவிழ்ந்தது.இதில் அதிகாரி ஆறுமுகம் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இதனிடையே தேசிய நெடுஞ்சாலையிலேயே கார் கவிழ்ந்து கிடந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக இணைப்புச் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story
