குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

X
Kulithalai King 24x7 |31 Jan 2026 7:09 PM ISTமுன்னாள் மாணவர்கள் பங்கேற்று சிறப்புரை
கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது கல்லூரி தொடங்கி 20 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் முன்னாள் மாணவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பிரகாஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் தலைமை உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பில் தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் யசோதா மற்றும் கணினி இயக்குனர் அசோக்குமார், ராணுவ வீரர் ஹரிகிருஷ்ணன், வழக்கறிஞர் சசிகுமார் ஆகியோர் கல்லூரியில் தாங்கள் பயின்ற அனுபவம் மற்றும் பேராசிரியர்கள் கல்விப் பணியையும், கல்லூரியின் கல்வி சேவை குறித்து வாழ்த்தி பேசினார்கள். இவ்விழாவில் மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்வில் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் வைரமூர்த்தி, ஆங்கிலத்துறை தலைவர் ஹில்டா தேன்மொழி, கணினி துறை தலைவர் தாமஸ் பிலிக்ஸ், கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் புவனேஸ்வரி, விலங்கியல் துறை தலைவர் பாபுநாத். வேதியியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் பேராசிரியர்கள் பத்மப்பிரியா, சாகுல் ஹமீது மற்றும் முன்னாள் மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு கல்லூரி செயல்பாடு குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள். இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை முன்னாள் மாணவர் சங்க குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புவனேஸ்வரி செய்திருந்தார். முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பேராசிரியர் கர்ணன் நன்றி கூறினார்.
Next Story
