என்.சி.சி. தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர்
Komarapalayam King 24x7 |31 Jan 2026 8:43 PM ISTஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக என்.சி.சி. ஏ சான்றிதழ் தேர்வு குமாரபாளையத்தில் நடந்தது
ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் கமாண்டிங் ஆபிஸர் லெப்டினன் கர்னல் கோபால் கிருஷ்ணா ஆணையின்படியும், அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் லெப்டினன்ட் கர்னல் ராஜவேலு ஆலோசனையின் படியும், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் உண்டு உறைவிடப் பள்ளி, சித்தோடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளியை சேர்ந்த 106 மாணவ மாணவிகளுக்கு தேசிய மாணவர் படை ஏ சான்றிதழ் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு என இரண்டு முறைகளில் நடந்தது. . ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இரண்டு ஆண்டுகள் என்.சி.சி. யில் வீரநடை, துப்பாக்கி சுடுதல், வரைபடம் வரைதல், தூரத்தை கணக்கிடுதல் , பல்வேறு உடற்பயிற்சிகள் போன்ற பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அளிக்கப்படும் இச்சான்றிதழானது வரும் காலங்களில் ராணுவத் துறை, காவல் துறை, வனத்துறை, ரயில்வே துறை அக்னிபாத், அக்னிவீர் போன்ற பாதுகாப்பு பணிகளிலும் மேலும் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கும் இரண்டு சதவீத இட ஒதுக்கீடு பெறச் இச்சான்றிதழ் உதவுகிறது... ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் சுபேதார் அழகர் ஹவிழ்தார் விஜயகுமார், தனியார் பள்ளியின் முதல்வர் திரு தணிகாசலம் தேசிய மாணவர் படை அலுவலர்கள் அந்தோணிசாமி, ராஜேஷ் குமார், கதிர்வேல், சுகன்யா ,தினேஷ் குமார் ஆகியோர் தேர்வினை நடத்தினார்கள்
Next Story


