பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: மேலும் ஒருவர் காயம்!

X
Ottapidaram King 24x7 |1 Feb 2026 3:36 PM ISTதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம், என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் மகன் ஜெனித் (32), இவர் நேற்று தனது மோட்டார் பைக்கில் புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். மேலமடம் அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது எதிரே சாமிநத்தம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் தனபால் (70) என்பவர் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஜெனித் மற்றும் தனபால் ஆகிய இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெனித் பரிதாபமாக இறந்தார். தனபால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிங் நியூஸ் செய்தியாளர் S.முகேஷ் குமார் ஓட்டப்பிடாரம்.
Next Story
