விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
X
குமாரபாளையம் நடராஜா நகர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையம் நடராஜா நகர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜன. 21ல் முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்த நிலையில்,,. நேற்று காலை 09:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இளம்பிள்ளை சிவசக்தி ஷண்முக சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக பூஜைகள் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.
Next Story