திமுகவின் வரலாறு தெரியாமல் எடப்பாடி வயிற்று எரிச்சலில் உளறி கொட்டி கொண்டிருக்கிறார்.திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்சு

X
Tiruchengode King 24x7 |1 Feb 2026 7:08 PM ISTவரலாறு தெரியாமல் எடப்பாடி வயிற்று எரிச்சலில் உளறி கொட்டி கொண்டிருக்கிறார்.பழைய உங்கள் வரலாறை கிளறினால் அசிங்கப்பட வேண்டி இருக்கும். ஊழலுக்காக கலைக்கப்பட்டது அல்ல திமுக ஆட்சி எமர்ஜென்சி எதிர்த்தற்காக கலைக்கப்பட்டது திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்சு
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக திருச்செங்கோடு கிழக்கு மேற்கு நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் ஐந்தாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்செங்கோடு நெல்லு புத்தி மண்டபம் அருகே நடைபெற்றது கூட்டத்திற்கு திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் நடேசன் தலைமை வகித்தார் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ்.மூர்த்தி,மாநில விவசாய அணி துணைச் செயலாளர் வெப்படை செல்வராஜ்ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பரமானந்தம்,திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சீனிவாசன் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவதுகழகத்தின் திராவிட மாடல் அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கிச் சொல்ல இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதுதிருச்செங்கோடு தான் திமுகவின் வளர்ச்சி நிலைக்கான அளவுகோலாக இருந்துள்ளது அதன்படி சொல்லுகிறேன் 2026 தேர்தலில் நாம் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று மீண்டும் ஆட்சி அமைக்க திமுக வழிகாட்டும்.திராவிட மாடல் அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை தனக்கே உரிய பாணியில் அமைச்சர் மதிவேந்தன் சுட்டிக்காட்டினார் எனக்கு முன் பேசிய பலரும் சுட்டிக்காட்டினார்கள் ஆனாலும் இது எடப்பாடிக்கு புரியவில்லைகூட்டத்திற்கு வருவதற்கு முன் எடப்பாடி பேசியதை தொலைக்காட்சியில் பார்த்தேன் அவருக்கு எதை பேசுவது எப்படி பேசுவது என்று தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறி கொட்டிக்கொண்டு இருக்கிறார்.ஸ்டாலின் ஆட்சியில் இதுவரை செய்யாத சாதனைகளை செய்து கொண்டிருப்பதால் எடப்பாடியார் வயிற்று எரிச்சலில் பேசி கொண்டிருக்கிறார்.இவ்வளவு நாள் இல்லாமல்இப்பொழுது பேசியிருக்கிறார் திமுக ஊழல் கட்சிதிமுகவில் இருந்த மந்திரிகள் எல்லாம் ஊழல் செய்தவர்கள்எம்ஜிஆர் ஊழல் புகார் கொடுத்தார் கோதுமை பேர ஊழல் சர்க்கரை பேர ஊழல்என்று புகார் கொடுத்ததாக கூறுகிறார் எம்ஜிஆர் புகார் கொடுக்கும் போது நாங்கள் ஆட்சியில் இருந்தோம் எம்ஜிஆர் 1977 இல் ஆட்சிக்கு வந்தார் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார் நாங்கள் ஊழல் செய்தது உண்மையாக இருந்தால் நிருபித்து எங்களை கைது செய்திருக்க மாட்டாரா அவரால் முடியவில்லைஎங்கள் சட்டமன்ற அலுவலகத்தை காலி செய்த எம்.ஜி.ஆர் நாங்கள் ஊழல் செய்து இருந்தால்எங்களை விட்டு வைத்திருப்பாராஎடப்பாடி பதில் சொல்ல வேண்டும்அதற்கு மாறாக யார் மீது எல்லாம் ஊழல் புகார் சொன்னார்களோ அவர்களையெல்லாம் மந்திரி ஆக்கினார் கோதுமை பேர ஊழல் சர்க்கரைப் பேர ஊழல்செய்ததாக எம்ஜிஆர் புகார் கொடுத்த ப உ சண்முகம்உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார்.மந்திரியாகப்பட்டார் இவையெல்லாம் எடப்பாடிக்கு தெரியாது.வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும் இதெல்லாம் அவருக்கு தெரியாது காரணம் அவர் ஒரு கொலை வழக்கு குற்றவாளியாக சுற்றிக் கொண்டிருந்தார். பங்காளியை கொலை செய்த வழக்கில் சங்ககிரி காவல் நிலையத்தில் எஃப் ஐ ஆர் போடப் பட்டதா இல்லையா அவரை வழக்குகள் இருந்து காப்பாற்றி சாட்சிகளை கலைத்தவர் தான் இன்றைய செங்கோட்டையன்இதை எடப்பாடியால்மறக்க முடியுமா பழையதை கிளறினால் அசிங்கமாகிவிடும்.எங்கள் தலைவர் கலைஞரைப் பற்றிதாறுமாறாக பேசியிருக்கிறார்திமுக ஆட்சி ஊழலுக்காககலைக்கப்பட்டது என்கிறார் எமர்ஜென்சி காலத்தில் காமராஜர் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக காமராஜர் கேட்டுக் கொண்டதை ஏற்று ஆட்சியில் இருந்தோம் எமர்ஜென்சியில் அதை எதிர்த்ததால் ஆட்சியை இழந்தோம்இதை தெரியாமல் எடப்பாடி பேசுகிறார் 1957ல் இருந்து ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஒரே சின்னத்தில் போட்டியிடுகிற கட்சி திமுக மட்டும் தான் என பெருமையோடுசொல்ல முடியும் என கூறினார். கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள்சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
Next Story
