ராசிபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

ராசிபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
X
ராசிபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோவிலின் திருப்பணிகள் 15. ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இக்கோவிலின் திருப்பணிகளை மேற்கொள்ள ஆர். பிரபாகரன் இந்து சமய அறநிலையை துறையிடம் கடந்த 2009 ஆம் ஆண்டு அனுமதி பெற்றிருந்தார். இதனை காரைக்குடி ஸ்பதி ராக்கப்பன் தலைமையில் சிற்ப கலைஞர்கள் சிலைகளை வடிவமைத்தனர். மேலும் பல்வேறு தூண்கள் அமைக்கப்பட்டு அதில் சிற்ப வேலைப்பாடுகளும் செய்யப்பட்டன. தூண்களில் உருவாக்கப்பட்ட பெருமாளின் தசாவதார சிலைகள் அனைவரையும் கவர்ந்ததாக அமைந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டு இதற்கான பணிகள் நடந்தன. முன்னதாக ஜனவரி 28ஆம் தேதி சுதர்சன ஹோமத்துடன் யாகசாலை பூஜையில்கள் தொடங்கின. யானைகள், குதிரைகள், பசுக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடத்தப்பட்டது.இதில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோவிலில் வழிபட்டனர். மொத்தம் 145 யாக குண்டங்கள்: "தொடர்ந்து எட்டு கால யாகசாலை பூஜைகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த அர்ச்சர்கள், பட்டாசாரியார்கள் யாக வேள்விகளை நடத்தினர். மொத்தம் 145 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஜீயர்களும் பட்டாச்சாரியார்களும் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகளும், இசை , கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அதிகாலை எட்டாம் கால யாக சாலை பூஜைகள், கேள்விகள் நடத்தப்பட்டது. கும்ப பூஜைகளும் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து தீர்த்தம் குடம் எடுத்து வந்து ராஜகோபுரம், கருவறை கோபுரம், சீனிவாச பெருமாள், ஹயக்ரீவர், ஆண்டாள் உள்ளிட்ட பிரதான சன்னதிகள் கோபுரங்களுக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டது. பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கிட வேத முறைப்படி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளித்தனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வழிபாடு நடத்தி பெருமாளின் தரிசனம் பெற்றனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 48. நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்பி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர், அட்மா குழு தலைவர் ஆர்.எம் துரைசாமி, மற்றும் கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள், ராசிபுரம் முக்கிய பள்ளி, கல்லூரி நிர்வாக குழுவினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
Next Story