ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உற்சவருக்கு பௌர்ணமி சிறப்பு பூஜை அலங்காரம்..

X
Rasipuram King 24x7 |1 Feb 2026 9:28 PM ISTராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உற்சவருக்கு பௌர்ணமி சிறப்பு பூஜை அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் அங்காள பரமேஸ்வரி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பௌர்ணமியை முன்னிட்டு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் சாத்தப்பட்டு திருத்தேர் உற்சவத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ பாலமுருகன் சுவாமி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story
