ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு பௌர்ணமி சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..

ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு பௌர்ணமி சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..
X
ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு பௌர்ணமி சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவிலில் பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று பின்னர் வெள்ளிக்கவசம், மஞ்சள் காப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் தரிசனம் செய்தனர். மேலும் எல்லை மாரியம்மன் வழிபாட்டு குழுவினர் பாடல்கள் பாடி ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story