நாமக்கல் எம்.பி. மகன் திருமண அழைப்பிதழ் – பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியிடம் நேரில் வழங்கினார்!

X
Namakkal King 24x7 |2 Feb 2026 4:30 PM ISTஇந்த சந்திப்புகளின் போது நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி., தனது மனைவியுடன் இணைந்து, தனது மகனின் திருமண அழைப்பிதழை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் மரியாதையுடன் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து,இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்த நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி. மற்றும் அவரது மனைவி, அவர்களது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கி வாழ்த்துகளை பெற்றனர்.இந்த சந்திப்புகளின் போது, நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் சுருக்கமாக கலந்துரையாடப்பட்டது. பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி இருவரும், மணமக்களுக்கு தங்களது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Next Story
