தைப்பூசத்தை முன்னிட்டு தண்டாயுதபாணி கோயிலில் சிறப்பு பூஜை –அதிமுக வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் ஏற்பாட்டில் அன்னதானம்!

X
Namakkal King 24x7 |2 Feb 2026 8:13 PM ISTதமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
நாமக்கல் சட்டமன்றத்தொகுதி, மோகனூர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில்,தைப்பூச திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான தங்கமணி எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கழக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் அவர்கள் ஏற்பாட்டில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சதாசிவம், சுதாகர், மயில் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story
