ராசிபுரம் எஸ்ஆர்வி பள்ளி சார்பில் போட்டி தேர்வு மையம் தொடக்கம்..

X
Rasipuram King 24x7 |2 Feb 2026 8:29 PM ISTராசிபுரம் எஸ்ஆர்வி பள்ளி சார்பில் போட்டி தேர்வு மையம் தொடக்கம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஆரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் வகையில் எஸ்ஆர்வி பப்ளிக் சர்வீஸ் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா எஸ்ஆர்வி பெண்கள் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பயிற்சி மையத்தின் மூலம் டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ், ஆர்.ஆர்.பி., எஸ்எஸ்இ.,உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயற்சியளிக்கப்படுகிறது. தகுதியான ஆசிரியர்கள் மூலம் இப்பயிற்சி வழங்கப்படுவதுடன், திட்டமிட்ட பாடத்திட்டம், தொடர் தேர்வுகள், தனிப்பட்ட வழிகாட்டுதல் போன்ற அம்சங்களும் இதில் ஈடம்பெறுகின்றன. எஸ்ஆர்வி பப்ளிக் சர்வீஸ் அகாதெமியை எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளியின் நிர்வாகிகள் பி. சுவாமிநாதன், ஏ.ராமசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
Next Story
