வையப்பமலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்க மேடை எம்எல்ஏ ஈஸ்வரன் திறந்து வைத்தார்

திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ24.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்க விழா மேடையை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பலதரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வையப்பமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நீண்ட நாட்களாக விழா மேடை தேவை என பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 24.5 லட்சம் மதிப்பீட்டில் விழா மேடையை தரமுடன் கட்டப்பட்டு அதனை இன்று திறப்பு விழா செய்தனர் பள்ளியின் தலைமை ஆசிரியை வரவேற்றுப் பேசினார் பள்ளியின் மாணவ மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர் இதில் மாணவர்கள் நடத்திய நாட்டுப்பற்று மிகுந்த ஆட்டம் பாட்டமும் பார்வையாளர்களை மெதுவாக கவர்ந்தது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசும்போது திருச்செங்கோடு தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் உதவியால் செய்யப்பட்டுள்ளது வையப்பமலை சுப்பிரமணியர் மலை கோயிலுக்கு மலைப்பாதை போடப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் இந்த தைப்பூசத்தின் போது சுவாமியை தரிசனம் செய்துள்ளனர் என்று கூறினார் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் வையப்பமலை வையப்பமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி பெற்று பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது நீண்ட நாளாக இந்த பள்ளிக்கு விழா மேடை தேவை என கோரிக்கை வைத்திருந்தனர் அதன்படி 24.5 லட்சம் மதிப்பீட்டில் விழா மேடை கட்டப்பட்டு இன்று திறப்பு விழா கண்டுள்ளது மேலும் இந்த பள்ளிக்கு ஆர்வ குடிநீர் தேவையான கேட்டு இருக்கிறார்கள் அதையும் செய்து கொடுப்பேன் என்று கூறினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story