ராமநாதபுரம் தமிழக அரசு உதவி செய்யவிவசாயிகள் காத்திருப்பு
Ramanathapuram King 24x7 |3 Feb 2026 6:14 AM ISTதாட்கோ சிறப்பு திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரிக்கை 124 ஆதிதிராவிடர் விவசாயிகள் காத்திருப்பு அரசு கவனம் தேவை
ராமநாதபுரம், மாவட்டம்தாட்கோ சிறப்பு திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி மற்றும் கீழக்கரை தாலுகாக்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் விவசாய குடிமக்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் சங்கம் நீண்ட காலமாக தொடர்ந்து அரசிடம் விண்ணப்பித்து வருகிறது. இதற்கு முன்னதாக 2009-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் 43 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு தாட்கோ சிறப்பு திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் வழங்கப்பட்டு, அவர்களின் விவசாய வாழ்க்கை பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று தற்போது வழங்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், அரசு செயலாளர் அவர்கள் தாட்கோ மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்து, அதன் தொடர்ச்சியாக மாவட்ட தாட்கோ மேலாளர் மூலம் கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி 124 ஆதிதிராவிடர் விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்டு, ஆய்வு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீண்ட காலம் கடந்தும் இதுவரை எந்தவிதமான திட்ட அமலாக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மழை சார்ந்த விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஆதிதிராவிடர் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, ஆய்வு முடிக்கப்பட்ட 124 பயனாளிகளுக்கு தாட்கோ சிறப்பு திட்டத்தின் கீழ் உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்துத் தர வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆதிதிராவிடர் ஆழ்துளை கிணறுகள் விவசாயிகள் நலச்சங்கம் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
Next Story


