ஆர்.டி மலையில் தைப்பூச திருவிழா
Kulithalai King 24x7 |3 Feb 2026 9:59 AM ISTஅம்மணிப்பாறையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலை ஸ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா முன்னிட்டு ஆறுமுகத்துடன். மயில் வாகனத்தில் அமர்ந்து.வள்ளி.தெய்வானையுடன் காட்சி தரும் சிவ சுப்ரமணிய சுவாமிக்கு. பால், தயிர், பஞ்ஞாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் பூஜையுடன் செய்யப்பட்டது. ஐம்பொன்சிலையான வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி மயில் வாகனத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அம்மணிபாறை என்ற மலையிலுள்ள சுனைநீரில் அஸ்திரதேவர் என்ற சாமி தீர்தவாரி நடைபெற்றது. பிறகு விநாயகர் கோவிலில் பரிவட்ட பூஜையுடன் மீன்டும் ஆர்டிமலை சிவன் கோவிலில் 350 பாதயாத்திரை பக்தர்கள் சூழு சார்பில் பஜனை பூஜை நடைபெற்று தீபாரதனையுடன் சுமார் 500 பக்தர்களுக்கு வடிசாத அண்னதானம் நடந்தது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தினசிவம் செய்திருந்தனர்.
Next Story




