மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபயணம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X
Nagapattinam King 24x7 |3 Feb 2026 7:19 PM ISTNagai News
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றி 100 நாள் வேலையை 60 நாட்களாக குறைத்தும்இத்திட்டத்திற்கான நிதியில் 60% மத்திய அரசும் 40 சதவீதம் மாநில அரசும் என மாநில அரசிற்கு நிதி சுமையை ஏற்படுத்தும் மத்திய அரசை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது முன்னதாக அக்கட்சியின் நாகை மாவட்ட தலைவர் விவேக் தலைமையில் பால் பண்ணை சேரியில் இருந்து திரளான காங்கிரஸ் கட்சியினர் நடைபயணமாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் அதனைத் தொடர்ந்துமாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார்
Next Story
