மன நலம் பாதித்த இளம் பெண் மாயம்

மன நலம் பாதித்த இளம் பெண் மாயம்
X
குமாரபாளையத்தில் மன நலம் பாதித்த இளம் பெண் மாயமானார்.
குமாரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராமன், 38. தனியார் நிறுவன தொழிலாளி. இவரது மூத்த சகோதரி வசந்தி, 45, தன் மகள் பிரியங்கா, 19, என்பவரை, ராமன் வீட்டில் விட்டுவிட்டு சேலம் சென்றுள்ளார். பிரியங்கா சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், ராமனின் அம்மா குப்பாயி, 65, சிறிய அக்கா செல்வி, 40, ஆகியோர், அபெக்ஸ் காலனியில் உள்ள பாடம் போடும் இடத்திற்கு நேற்றுமுன்தினம் மதியம் 12:00 மணியளவில் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பூஜை முடிந்து திரும்பி பார்த்த போது, பிரியங்காவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவவில்லை. இதுகுறித்து ராமன், குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். குமாரபாளையம் போலீசார், காணாமல் போன பிரியங்காவை தேடி வருகின்றனர்.
Next Story