அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுஷ்டிப்பு

X
Komarapalayam King 24x7 |3 Feb 2026 7:40 PM ISTமுன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது . பள்ளிபாளையம் பிரிவு சாலையிலிருந்து மவுன ஊர்வலம் துவங்கி, தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலை வரை நடந்தது. நகர செயலர் பாலசுப்ரமணி தலைமை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி மவுன ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Next Story
