திருச்செங்கோடு காளிப்பட்டி தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காளிப்பட்டி தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு நீதிமன்றம் இன்று நடைபெற்றது இந்த சிறப்பு நீதிமன்றத்தில் சிறிய வழக்குகளை விசாரித்து நீதிபதி ரங்கராஜ் அபராதம் விதித்தார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே காளிப்பட்டியில் கந்தசாமி திருக்கோயில் உள்ளது ஆண்டுதோறும் இந்தக் கோயில் தைப்பூச தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது கடந்த 150 ஆண்டுகளாக இந்த தேர் திருவிழா இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து குறைவாக இருந்த காரணத்தாலும் திருவிழா நடக்கும் சமயங்களில் சிறுசிறு குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது உடனடியாக தண்டனை வழங்க வசதியாக திருவிழா நடைபெறும் 7 நாட்களும் சிறப்பு நீதிமன்றம் நடைபெற்று வந்தது ஆனால் அது நாளடைவில் மூன்று நாட்களாக சுருங்கி தற்போது ஒரே ஒரு நாள் மட்டும் சிறப்பு நீதிமன்றம் இயங்கி வருகிறது காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் வகுப்பறையில் திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரங்கராஜ் தலைமையில் சிறப்பு நீதிமன்றம் நடைபெற்றது போக்குவரத்து விதிமுறை மீறல் அடிதடி தகராறு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மது குடித்துவிட்டு ரகளை செய்வது போன்ற குற்றங்களை நீதிபதி விசாரித்து அவர்களுக்கு அபராதம் விதித்தார் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த சிறப்பு நீதிமன்றம் இந்த நவீன காலத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருவது பக்தர்களையும் பொது மக்களையும் கவர்ந்து உள்ளது
Next Story