நாமக்கல்லில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு!

X
Namakkal King 24x7 |3 Feb 2026 11:05 PM ISTநாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் நாமக்கல்லில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.இதனையொட்டி, நாமக்கல்–மோகனூர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு திமுக கிழக்கு மாவட்டத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, சிலையின் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி., அவைத்தலைவர் மணிமாறன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர கழக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும், திமுக மாநில உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Next Story
