கூலிப்பட்டி ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் நன்கொடை வழங்கினார்!

X
Namakkal King 24x7 |4 Feb 2026 5:13 PM ISTமஹா கும்பாபிஷேக விழாவிற்காக அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் அவர்கள் ரூ.15,000/- நன்கொடையாக வழங்கினார்.
கூலிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் அவர்களிடம், முன்னாள் எருமப்பட்டி ஒன்றிய தலைவர் (பொறுப்பு) லோகு (எ) லோகநாதன் முன்னிலையில், திருக்கோயில் கும்பாபிஷேக குழுவினர் விழா அழைப்பிதழை வழங்கினர்.இதனைத் தொடர்ந்து, மஹா கும்பாபிஷேக விழாவிற்காக ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் அவர்கள் ரூ.15,000/- நன்கொடையாக வழங்கினார்.இந்த நிகழ்வில் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் கும்பாபிஷேக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
