நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவிகளின் கிராமப்புற விவசாய அனுபவ களப்பயணம்

X
Namakkal King 24x7 |4 Feb 2026 5:47 PM ISTகபிலர்மலை பகுதியில் பல்துறை பயிர் செய்கையை மேற்கொண்டு வரும் புதுமைமிக்க விவசாயி கோபியின் பண்ணையை பார்வையிட்டனர்.
நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் தங்களது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற விவசாய அனுபவப் பணித்திட்டம் (RAWE) கீழ் 60 நாட்கள் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை கிராமத்தில் தங்கி களப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மாணவிகள் சுருதிநீதா, சிந்துசாரன், சௌபரணிகா, சௌமியா, ஸ்ரீ ஜனனி, ஸ்ரீதேவிபாரதி, ஸ்ரீநிதி ஆகியோர் ஒரு குழுவாக கபிலர்மலை பகுதியில் பல்துறை பயிர் செய்கையை மேற்கொண்டு வரும் புதுமைமிக்க விவசாயி கோபியின் பண்ணையை பார்வையிட்டனர்.அங்கு அவர் மரவள்ளிக்கிழங்கு, செவ்வந்தி மற்றும் ரோஜா மலர்கள், பொள்ளாச்சி ஓட்டு கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வரும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்தார். மேலும், பயிர் சாகுபடி முறைகள், கிடைக்கும் பயன்கள், சந்தை விலை நிலவரம், கொள்முதல் மற்றும் விற்பனை நடைமுறைகள் குறித்து மாணவிகள் விரிவாகக் கேட்டு அறிந்து கொண்டனர். இந்த பணித்திட்டத்தின் கீழ், மாணவிகள் தினந்தோறும் பல்வேறு விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணித்திட்டம் நிறைவடைந்த பின்னர், தங்களது அனுபவங்கள் மற்றும் ஆய்வுகள் அடங்கிய அறிக்கையை திட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
Next Story
