நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் – முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்! -கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தகவல்

X
Namakkal King 24x7 |4 Feb 2026 6:45 PM ISTநாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன பால் பதனிடும் ஆலையும் முதல்வரால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் (பிப்ரவரி .5) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் இராஜேஸ்குமார் தெரிவித்தார்.நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் வியாழக்கிழமை (பிப் -5 ) நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாக கூறினார்.அதன்படி, ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட 523 ஊரக குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் மற்றும் 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.மேலும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன பால் பதனிடும் ஆலையும் முதல்வரால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட உள்ளது.இந்த ஆலையில் தினமும் 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளாக விற்பனைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் நேரடியாக 15 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களும், 5 இலட்சம் நுகர்வோரும் பயன்பெறுவார்கள். மேலும் தினந்தோறும் 10 ஆயிரம் லிட்டர் தயிர், 200 கிலோ பால்கோவா, 1,000 கிலோ வெண்ணெய் உள்ளிட்ட பால் உப பொருட்களும் உற்பத்தி செய்யப்படும். அதேபோல, மோகனூர் பகுதியில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 4,500-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 16 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.மேலும், இராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டி முதல் கெடமலை வரை போதமலை பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.34.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையும் முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார் என அவர் தெரிவித்தார்.
Next Story
