பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் திறப்பு!

பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் திறப்பு!
X
மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் கணினி பயன்பாட்டுத் திறனும் மேம்படும் வகையில் புதியதாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிஜிபி கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியில், மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் கணினி பயன்பாட்டுத் திறனும் மேம்படும் வகையில் புதியதாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.இந்த ஆய்வகத்தை பிஜிபி கல்விக் குழுமங்களின் தலைவர் பி.ஆர். சம்பத் ஐஏஎஸ் (ஓய்வு) திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை எளிமையாக்குவதில் கணினி தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கணினி உலகளாவிய அளவில் அத்தியாவசியமானதாக மாறியுள்ளது” என தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு தாளாளர் எம். கணபதி முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் வே. கலைமணி வரவேற்றார்.முதன்மையர் முனைவர் க. பெரியசாமி, தலைமை நிர்வாக அதிகாரி எம். சந்திரசேகரன், துணைத் தலைவர் (நிதி) ஆர். மீனாட்சிசுந்தரம், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆ. சண்முகசுந்தரம், துணை முதல்வர் கு. கோகுல கண்ணன், கணினி அறிவியல் துறைத் தலைவர் கோ. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story