நெல் கொள்முதல் மையத்தில் டி.எஸ்.ஒ. ஆய்வு

X
Komarapalayam King 24x7 |4 Feb 2026 9:40 PM ISTகுமாரபாளையம் அருகே நெல் கொள்முதல் மையத்தில் டி.எஸ்.ஒ. ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் அருகே எளையாம்பாளையம் நெல் கொள்முதல் மையத்தில், சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாயிகள் , தங்கள் நிலங்களில் பயிரிட்ட நெல்லை இங்கு கொண்டு வந்தனர். பலநாட்கள் ஆகியும், கொள்முதல் செய்யவில்லை என புகார் எழுந்தது. நேற்றுமுன்தினம் இந்த நெல் யாவும் முளைப்பு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கவலையடைந்து, அதிகாரிகள் வசம் உடனே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் தலைமையில் வந்த அதிகாரிகள், கொள்முதல் மையத்தில் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அறிவுறுத்தினர். இது குறித்து தாசில்தார் பிரகாஷ் கூறியதாவது: பல நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என புகார் எழுந்தது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் தலைமையில் வந்த அதிகாரிகள், இந்த மையத்தில் ஆய்வு செய்தனர். விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, காலதாமதம் ஏற்படாமல் நெல் கொள்முதல் செய்யப்படும் என உறுதி கூறினார்கள். மையத்தில் உள்ள அதிகாரிகள் வசம் விவசாயிகளுக்கு பாதிப்ப இல்லாத வகையில் உடனே நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர், இவ்வாறு அவர் கூறினார். இதன்பின் மேற்படி கொள்முதல் மையத்தில் நெல் அளக்கப்பட்டு, மூட்டைகளாக கட்டி வைத்தனர்.
Next Story
