பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

X
Komarapalayam King 24x7 |4 Feb 2026 9:57 PM ISTகுமாரபாளையம் , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
குமாரபாளையம் , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. கருத்தரங்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயனி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அந்தியூர் மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தின் சட்ட உதவி குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான கவிஸ்வரி பங்கேற்று, மாணவ மாணவிகளின் உரிமைகள், சட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் புகார் அளிக்கும் முறைகள் குறித்தும், பாலின அடிப்படையிலான பாலினக் கட்டுப்பாடு ,பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், குழுவின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பேசினார். இதில் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெருமளவில் பங்கேற்றனர். கல்லூரியின் உள் புகார் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.
Next Story
