தடுப்புகள் அமைக்காமல் வடிகால் பணி வாகன ஓட்டிகள் அதிருப்தி
Komarapalayam King 24x7 |5 Feb 2026 6:26 PM ISTகுமாரபாளையத்தில் தடுப்புகள் அமைக்காமல் வடிகால் பணி நடந்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர்
குமாரபாளையம் புத்தர் வீதியில் நான்கு சாலை சந்திப்பில், சாலையின் குறுக்கே வடிகால் பணி துவங்கியது. எந்த பக்கமும் தடுப்புகள் அமைக்காமல் சாலை துண்டிக்கப்பட்டு பணிகள் நடந்தது. இதனால் சாலை துண்டிக்கப்பட்ட தகவல் தெரியாமல் கார், டெம்போ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் அந்த குறுகிய சாலை வழியாக சென்றது. துண்டிக்கப்பட்ட பகுதியில் வாகனத்தை திருப்பவும் வழியில்லை. அதனால் அனைத்து வாகனங்களும் பின்புறமாக வெகு தூரம் செல்லும் நிலை ஏற்பட்டது. துண்டிக்கப்பட்ட சாலையின் இருபுறமும் இதே நிலை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். பொறுப்பற்ற முறையில் வடிகால் பணி செய்த ஒப்பந்ததாரர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story


