பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன- மாவட்ட ஆட்சியர் தகவல்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன- மாவட்ட ஆட்சியர் தகவல்.
X
தமிழ் வளர்ச்சித் துறை நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு பிறந்தநாள் விழாப் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன- மாவட்ட ஆட்சியர் தகவல்.

நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழாப் பேச்சுப்போட்டி 10.02.2026 அன்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் விழாப் பேச்சுப்போட்டி 11.02.2026 அன்றும் நடத்தப்பெறும். அனைத்து அரசு / தனியார் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்குமான (தனித்தனியே) இப்போட்டிகள் நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி(தெற்கு) கலையரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 2.00 மணி முதல் 05.00 மணி வரையிலும் நடத்தப்பெறும்.இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/• இரண்டாம் பரிசு ரூ.3000/. மூன்றாம் பரிசு ரூ.2000/. வழங்கப்பெற உள்ளது. பள்ளி மாணவர்களுகென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ.2000/. வீதம் வழங்கப்பட உள்ளது. இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/• இரண்டாம் பரிசு ரூ.3000/. மூன்றாம் பரிசு ரூ.2000/. வழங்கப்பெற உள்ளது.10.02.2026 அன்று அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழாப் பேச்சுப்போட்டிப் பள்ளி மாணவர்களுக்கு, காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள் என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவர்களுக்கு, காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற தலைப்பிலும் நடைபெறும்.11.02.2026 அன்று ஜவகர்லால் நேரு பிறந்தநாள் விழாப் பேச்சுப்போட்டிப் பள்ளி மாணவர்களுக்கு, இந்தியாவின் பிரதமராக நேருவின் பணி, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, பஞ்சசீலக் கொள்கை, என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவர்களுக்கு, நேருவின் வெளியுறவுக் கொள்கை, நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், சுதந்திரப் போராட்டத்தில் நேரு என்ற தலைப்பிலும் நடைபெறும்.பள்ளி மாணவ மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரி மாணவ மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாகவும், இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூடுதல் கட்டடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத் தொலைபேசி எண் – 04286- 292164ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story