காளியம்மன் திருவிழாக்குழு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

X
Komarapalayam King 24x7 |5 Feb 2026 6:50 PM ISTகுமாரபாளையம் காளியம்மன் திருவிழாக்குழு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் காளியம்மன் கோவில் மாசித்திருவிழாவிற்கென புதிதாக கமிட்டி நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமையில், செயற்குழு கூட்டம் நடந்தது. கமிட்டி தலைவராக முன்னாள் கவுன்சிலர், நகர தெற்கு தி.மு.க. செயலர் ஞானசேகரன் துணைத் தலைவர்களாக முன்னாள் நகர தி.மு.க. செயலர் செல்வம், ராஜேந்திரன் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் நகராட்சி தலைவர் ஜெகந்நாதன், முன்னாள் கமிட்டி தலைவர் ரகுநாதன், தொழிலதிபர் ராஜாராம் உள்ளிட்ட பலர் சாலை அணிவித்து வாழ்த்து கூறினார்கள். ஏற்கனவே கமிட்டி நிர்ணயித்த தேதியில் மாசித்திருவிழாவினை நடத்துவதென செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.. ஞானசேகரன் பேசியதாவது: வரும் மாசித்திருவிழாவினை மிகச்சிறப்பாகவும் அமைதியாகவும் நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஊர்பெரியவர்களுக்கு உரிய மரியாதைசெய்து அனைவரையும் விழாவில் பங்கேற்கசெய்து ஒற்றுமையுடன் பணியாற்றிட உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
